புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள், மருத்துவ ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு வரும் 23ம் தேதி வருகை தருகின்றனர். கடலுாரில், 24ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளனர்.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மருதாச்சலம், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்பிரமணியன் ஆகியோர், வரும் 23ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.இருவரும், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், 23ம் தேதி மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.
தொடர்ந்து இருவரும், மறுநாள் 24ம் தேதி கடலுார் ஆற்காட் மருத்துவமனையில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மருதாச்சலத்திடம், வயிற்று புண், வயிற்று வலி, செரிமான மண்டலத்தில் ரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வீக்கம், மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், எடை இழப்பு, வெளிர் நிற ரத்தம், வாந்தி, தார் நிற மலம், குமட்டல், பசியிழப்பு, விழுங்குவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சை பெறலாம்.
மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன், தலைவலி, வலிப்பு நோய், பார்கின்சன்ஸ், பக்கவாதம், பார்வை குறைபாடு, முகம், கழுத்து, முதுகு நரம்பு கோளாறுகள், காதுகேளாமை, காதுகளில் சத்தம் வருதல் ஆகிய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், மூளை கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம், மறதி, முடக்குவாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய், உயர் ரத்த அழுத்தம், மறுவாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்கள் ஆலோசனை பெறலாம்.
மருத்துவ முகாமில் பங்கேற்க வரும்போது முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வர வேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-300 ரூபாய். முன்பதிவுக்கு 93840-83062, 98412-68500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.