எனக்கென்று சொந்தமான இருப்பிடம் கிடையாது, நான் எனது நண்பரின் படுக்கை அறையைத் தான் பகிர்ந்து கொள்ளகிறேன் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எனக்கென்று சொந்தமான இருப்பிடம் இதுவரை இல்லை, மற்றும் எனது வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களை நண்பர்களின் படுக்கை அறையில் தான் பகிர்ந்துகொள்கிறேன் என ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான TED பேச்சு நேர்காணல் தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்லா நிறுவனத்தின் பொறியியல் அமைப்புகள் நிறைந்த பே பகுதிக்கு சென்றால் கூட அங்குள்ள எனது நண்பர்களின் படுக்கை அறையை தான் பகிர்ந்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
“I’m motivated by curiosity more than anything — and just a desire to think about the future and not be sad.”
Watch the exclusive interview with @TEDChris and @ElonMusk to learn about Musk’s vision for the future, on Earth *and* on Mars: https://t.co/Z5cwbFNldy pic.twitter.com/XAhmgK6wOW
— TED Talks (@TEDTalks) April 18, 2022
ஒருவேளை எனது தனிப்பட்ட வசதிகளுக்காக பில்லியன் டாலர்களை நான் செலவு செய்தால் அது மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும், ஆனால் “அது அப்படி இல்லை” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஜெட் விமானம் குறித்து பதிலளித்த எலன் மஸ்க், தனிப்பட்ட ஜெட் விமானத்தை நான் பயன்படுத்தாவிட்டால் பணி செய்வதற்கான குறைந்த நேரமே கிடைக்கும் என்பதால் அதனை பயன்படுத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tesla மற்றும் Space X நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது தொடர்பான சர்ச்சையில் தலைப்பு செய்திகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்டப்போர் தொடங்கிவிட்டது…சண்டையிட நாங்கள் தயார்: ஜெலன்ஸ்கி சூளுரை!