சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தளபதி படைத்த மெஹா சாதனை..!

நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே
பீஸ்ட்
படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ்
தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து
விஜய்
நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய்காந்த் காலத்து அரசப்பழசான கதையை படமாக கொடுத்துள்ளதாக நெல்சனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.

வாவ்… 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி: கம்பேக்கிற்கு ரெடியான நஸ்ரியா..!

மேலும் ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘
அரபிக்குத்து
‘ பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது இந்தப்பாடல் இந்தியாவில் வெளியான லிரிக்கல் வீடியோக்களில் 6 மில்லியன் லைக்குகளை குவித்து மெஹா சாதனை படைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியான விஜய்யின் ‘அரபிக்குத்து’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டட்டித்துள்ளது. இந்தப்பாடலுக்கு சின்னத்திரை தொடங்கி பெரியத்திரை வரை பல நாயகிகள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். ‘பீஸ்ட்’ படம் வெளியானதில் இருந்து குவிந்த நெகட்டிவ் விமர்சனத்தால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ‘அரபிக்குத்து’ பாடல் படைத்துள்ள புதிய சாதனை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாரே… அடிபொலி சாரே… கேரளா பீஸ்ட் விமர்சனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.