தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் தனி இடத்தை பிடித்துள்ளார்
தனுஷ்
. தன்னால் கிளாஸான படங்களிலும் நடிக்கமுடியும் அதே சமயத்தில் மாஸான படங்களிலும் நடிக்கமுடியும் என நிரூபித்தவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று வெற்றி கண்டுள்ளார் தனுஷ்.
நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக கலக்கிவருகிறார். இத்தனை சிறப்பு பெற்ற தனுஷ் சமீபகாலமாக வெற்றி படத்திற்காக போராடி வருகின்றார்.
தனுஷை நம்பியிருக்கும் அவர்கள்..! காப்பாற்றுவாரா தனுஷ் ?
அவரின் கடைசி சிலப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது நடித்துவரும் படங்களின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார் தனுஷ். இந்நிலையில் சமீபகாலமாக தனுஷின் மீது ஒரு குற்றச்சாற்று வைக்கப்பட்டுவருகின்றது.
தனுஷ்
அதாவது அவர் நடிக்கும் தமிழ் படங்களுக்கு ஒரு ட்வீட் கூட போடாத தனுஷ் பாலிவுட் படங்களுக்கு மட்டும் ஓடிப்போய் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார் என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ்
அவர் நடிப்பில் வெளியான
ஜகமே தந்திரம்
,
மாறன்
ஆகிய படங்களை கண்டுகொள்ளாத தனுஷ் பாலிவுட் திரைப்படமான
அத்ராங்கி ரே
படத்திற்கு விழுந்து விழுந்து ப்ரோமோஷன் செய்தார். இந்நிலையில் தற்போது
ஷாருக்கான்
மற்றும் ராஜ்குமார் ஹிரானி இணையும் படத்தைப்பற்றிய அறிவிப்பை ஷாருக் கான் வெளியிட்டார்.
அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் ஷேர் செய்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட் படங்களுக்கு காட்டும் அக்கறையை தமிழ் படத்திற்கும் காட்டுங்கள் என விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உச்சகட்ட மோதல்; தந்தைக்கு பதிலடி கொடுத்த யுவன்?