தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஞானரத யாத்திரையை துவக்கி வைக்க வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னம்பந்தல் அருகே விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தராததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆதீனம் நோக்கி ஆளுநர் வாகனம் செல்லும் சாலை முன் போராட்டக்காரர்கள் திரண்ட நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்ட போது இருதருப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் கருப்புக்கொடியை சாலையில் தூக்கி வீசி எறிந்தனர்.