வார இறுதியில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆக இருந்தது.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 40 ஐ விட குறைவடைந்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி நேற்று முன் தினம்(17) மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 5 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 37 பேருக்கும், நேற்றய முன்தினம்(16) 622 அன்டிஜென் பரிசோதனையில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வரை மொத்தம் 6 இலட்சத்து 62 ஆயிரத்து 864 பேருக்கு கொவிட் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 7 ஆயிரத்து 242 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இலங்கையர்களும், 328 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவர்.
தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, கொழும்பில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 34 பேரும், கம்பஹாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 341 பேரும், களுத்துறையில் 58 ஆயிரத்து 210 பேரும், காலியில் 45 ஆயிரத்து 575 பேரும், குருநாகலைச் சேர்ந்த 31 ஆயிரத்து 480 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது, கொழும்பில் இருந்து ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 737 தொற்றாளர்களும், கம்பஹாவில் இருந்து 95 ஆயிரத்து 807 தொற்றாளர்களும், களுத்துறையில் இருந்து 51 ஆயிரத்து 152 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர்.
தற்போது, 3 ஆயிரத்து 815 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 197 பேருக்கு கொவிட் 19 அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மூன்று பேர் சிகிச்சை நிலையங்களில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் , இதன் மூலம் நாட்டின் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 42ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
K.Sayanthiny