திரிபுராவிலும் பன்றிக்காய்ச்சல் – நோய் பாதிக்கப்பட்ட அனைத்து பன்றிகளையும் கொலை செய்ய உத்தரவு

அகர்தலா:
மிசோரத்தை தொடர்ந்து திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில விலங்கு வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த பன்றிக்காய்ச்சலால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஏப்ரல் 7-ம் தேதி வடகிழக்கு பகுதி நோய் கண்டறிதல் சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 13 என்று கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரிகளிலும் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பண்ணையில் உள்ள அனைத்து பன்னிகளுக்கு இடையே பரவி வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பன்றியில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்வதற்கு திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 8 அடிக்கு 8 அடி குழிகள் வெட்டி அனைத்து பாதிக்கப்பட்ட பன்றிகளையும் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பண்ணைகளையும் சோதனையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு 10 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் விலங்கியல் மருத்துவர்களால் வழிநடத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலை குறித்து சோதனைக்கூட அதிகாரிகள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மிசோரத்தில் 700 பன்றிகள் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் 17 கிராமங்களுக்கு பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.