திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில், துணை தாசில்தார் ஜெயகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்தமகேஸ்வரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர் தலைவரும், தக்கார் பிரதிநிதியுமான தக்கார் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜ ஆதித்தன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆதித்தன், மத்திய அமைச்சரின் நியமனர் (இளைஞர் நலன், விளையாட்டு) ஹெட்கேவார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடியில் தட்சணமாற நாடார் சங்கம் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவபடத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.