ஐதராபாத்: தெலுங்கு படத் தயாரிப்பார் நாராயண் தாஸ் நரங் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ெதலங்கானா மாநிலத்தை சேர்ந்த மூத்த டோலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் (76), உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது நடக்கும் இறுதி ஊர்வலத்தில் டோலிவுட் பிரமுகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மறைந்த நாராயண் தாஸ் நரங்கின் மகன் சுனில் நரங்கும் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நாராயண் தாஸ் நரங், கடந்த 1980ம் ஆண்டுகளில் திரைத்துறையில் கேஷியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு நிதியளித்துள்ளார். ஐதராபாத்தில் அமைந்துள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்தார்; தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.