மும்பை: தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 704 புள்ளிகள் சரிந்து 56,463 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவன பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.