மருத்துவ உபகரணங்கள்
தேவை என்று இந்தியாவுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது
ரஷ்யா
.
உக்ரைன் போர்
காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது ரஷ்யா.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதில் ஒன்று மருத்துவ உபகரணங்களை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கான தடை. இதன் காரணமாக ரஷ்யாவில் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ஐரோப்பா மற்றும் சீனாவிடமிருந்து அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கறை இறக்குமதி செய்யும் ரஷ்யா. தற்போது ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் தங்களது சப்ளையை நிறுத்தி விட்டன. சீனாவிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. அது போதுமானதாக இல்லை. எனவே தனது நீண்ட கால தோழரான இந்தியாவின் உதவியை நாடியுள்ளது ரஷ்யா.
திடீர்னு லீவு போட்டுட்டுப் போன ஜனாதிபதி.. பாக். அமைச்சரவை பதவியேற்பு விழா கேன்சல்!
இதுதொடர்பாக
இந்தியா
மற்றும் ரஷ்யா இடையே ஏப்ரல் 22ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று இந்திய மருத்துவ உபகரணத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு அதிக அளவிலான மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்கம் அம்சமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ உபகரண சந்தையை இந்தியா கைவசப்படுத்தக் கூடிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
370 தொகுதிகளில் போட்டி + வலுவான கூட்டணி.. இதுதான் பி.கே. பிளான்.. ராகுலுக்கு ஓ.கே!
ஆனால் அமெரிக்கா நிச்சயம் இதற்கு முட்டுக்கட்டை போட முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவதையே அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ரஷ்யாவிடமிருந்து எதுவும் வாங்கக் கூடாது, கொடுக்கக் கூடாது என்று அது இந்தியாவை மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை இந்தியா சட்டை செய்வதில்லை. இந்த நிலையில் மருத்துவ உபகரண ஏற்றுமதிக்கு அது எந்த மாதிரியான இடையூறை செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் இதையும் இந்தியா சட்டை செய்யாது என்றே கருதப்படுகிறது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு உதவி செய்யும் நாடுகள் அடியோடு குறைந்து விட்டன. தற்போதைக்கு இந்தியாதான் மிக முக்கிய பங்குதாரராக இதில் உருவெடுத்துள்ளது. எனவே ரஷ்ய மார்க்கெட்டை இந்தியா மொத்தமாக வளைத்துப் பிடிக்க அரிய வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்று இந்தியத் தொழில்துறையினர் கருதுகின்றனர்.