பலிகடாவாக மாறிப்போனார் இசைஞானி! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா கருத்துக்கு ஆதரவும்… எதிர்ப்பும்… உங்கள் நிலைப்பாடு என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
dhadari

கங்கை அமரனை வைத்து.. இளையராஜாவை இப்படி சொல்லச்சொல்லி இருக்கலாம்.. பாஜக மேலிடங்கள்..
இவருக்கு இருக்கும் நற்பெயரினால் தமிழகத்தில் கொஞ்சம் கட்சியை பலப்படுத்தி கொள்ளமுடிம் என்ற நப்பாசையில்.
அதுக்கு பலிகடாவாக மாறிப்போனார் இசையானி!
இதைமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Habeeb Rahman

இவ்வளவு மதக்கலவரங்கள் நடக்கிறது. இதுவரை பிரதமரோ, குடியரசுத் தலைவரோ கண்டிக்கவில்லை. இதுவா அம்பேத்கார் அவர்கள் கோட்பாடு. பிரதமரை அவர் புகழ்ந்து பேசட்டும், அது அவரது உரிமை. ஆனால் ஒப்பீடு செய்வது நல்லதல்ல. நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலை என்ன அதற்கு நமது அரசு என்ன செய்வது என்று தெரியாமல், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. இது என்ன நியாயம்?

தமிழ் மாணவன்

பிரதமர் குறித்த இளையராஜாவின் கருத்தினை தனிப்பட்ட கருத்தாக மட்டுமே கருத வேண்டும். அவர் அப்படி கூறவே கூடாது என்று சொல்லவும் முடியாது. அதற்காக அவர் கருத்துதான் சரி என்ற அர்த்தமும் இல்லை. தனிப்பட்ட கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது ஒவ்வொருவரின் கடமை.அதேபோல அந்த கருத்து தவறானதாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் கடமை. அம்பேத்கருக்கு என்றுமே பிரதமர் மோடி ஒருபோதும் இணையாக முடியாது. இது சத்திய வார்த்தை.

Varadharaj

ஜனநாயக நாட்டில் தனிப்பட்ட முறையில் அவர் (விருப்பத்தை)கருத்தைக் கூற முடியாத நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது இந்த ஆட்சி

image

Velu Gopal

கனிமொழியை வேலு நாச்சியாருடன் ஒப்பிட்டு பேசும் போது, அதை கருத்து சுதந்திரம் என்றனர்.
நெல்லை கண்ணன், ஸ்டாலினை காமராஜரோடு ஒப்பிட்டு பேசும் போது அவர் மீது வன்மம் காட்டாமல், கருத்து சுதந்திரம் என்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பகிரங்கமாக திமுக கூட்டணியின் சமூக நீதி பயணத்திற்கு நன்றி, வாழ்த்து என பேசும் போது, அது அரசியல் கடந்த கருத்து சுதந்திரம் என்றனர்.
ஆனால், இளையராஜா மட்டும் அறிவாலயத்தை குளிர்விக்கும் கருத்தைத்தான் வெளியிட வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை இது ?
மனதில் தோன்றுவதை பேசுவதுதான் கருத்து சுதந்திரம், இதைத் தான் பேச வேண்டும், இதை எல்லாம் பேசக்கூடாது என்று திணிப்பது கருத்து சுதந்திரத்தை எதிர்க்கொள்ள முடியாத கோழைத்தனம்.
என்றும் இசைஞானி
என்றென்றும் இசைஞானி

தமிழன் ராஜ்
நீங்கள் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் இருவரையும் ஒப்பிட்டு பேச வில்லை.
இதை எதற்காக அரசியல் ஆக்க வேண்டும்.
ஓரு பாரத பிரதமரை இழிவுபடுத்துவது இங்குள்ளவர்களுக்கு சுலபம். ஆனால் புகழ்ந்து பேசுவது கடினம்.அப்படி யாராவது புகழ்ந்தால் அவரை ஏளனமாக பார்ப்பது வழக்கம் தான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.