கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் கடந்த 14ஆம் தேதி பாஜகவின் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துள்ளனர். மேலும் சுவரொட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரை திமுகவினர் தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், திமுகவின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில் 3 பேரை நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஏடிஎஸ்பிகள் ராதாகிருஷ்ணன், கண்ணன், டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும், மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 206 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே சமயத்தில், எஸ்.பி அலுவலகத்தில் பாஜகவினர் மீது திமுகவினர் புகார் அளித்து உள்ளனர்.