வெகுசன ஊடக அமைச்சராக நேற்று (18) பதவியேற்றுக் கொண்ட கலாநிதி நாலக கொடஹேவா இன்று (19) மாலை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் புதிய அமைச்சரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின் நிமித்தம் எவ்வித விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.