விஜய் சேகர் ஷர்மாவின் ஐபிஓ கனவானது நினைத்ததை போலவே நிறைவேறினாலும், இதனால் முதலீட்டாளர்கள் இன்று வரையிலும் ஹேப்பியாக இல்லை எனலாம். ஏனெனில் இப்பங்கின் விலையானது வெளியீட்டு நாளிலேயே 27%-க்கும் அதிகமான சரிவினைக் கண்டது.
இன்று வரையில் 65% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதன் வெளியீட்டு விலையானது 2150 ரூபாயாகும்.
இது நிறுவனம் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அதன் லாபம் பற்றிய கவலைகள் அதிகம் உள்ளது.
ஒழுங்குமுறை நடவடிக்கை
குறிப்பாக பேடிஎம் மீதான ஓழுங்கு முறை நடவடிக்கையானது இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை ஆட்டிப் பார்க்கும் விதமாக வந்தது. பேடிஎம் நிறுவனத்தின், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் இதர தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளார்களை சேர்க்கவும் தடை விதித்தது. இதுவும் இப்பங்கின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இலக்கு விலை
சர்வதேச அளவிலான நிதி நிறுவனமான சிட்டி, நிபுணர்களின் இந்த கருத்தினை அவநம்பிக்கை என கூறியுள்ளது. அது மட்டும் அல்ல இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என்றும், இதன் இலக்கு விலையினை 910 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து, 34% மேலாக அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதி
சிட்டியின் இந்த கணிப்பானது நம்பிக்கை இழந்திருந்த பேடிஎம் முதலீட்டாளார்களுக்கு பெரும் ஆறுதலாகவும் வந்துள்ளது.
இப்பங்கின் விலையானது அதன் பங்கு வெளீயீட்டு விலையில் இருந்து 71% மேலாக சரிவினைக் கண்டு, தற்போது சற்றே ஏற்றம் கண்டுள்ளது. இது ஒரு அதிக மதிப்பீடு, ஒழுங்குமுறை கவலை, நிறுவனத்தின் லாபம் பற்றிய கவலை என பலவும் காரணமாக கூறப்பட்டாலும், தற்போதைய விலையில் இருந்து அதிகரிக்கலாம் என சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதான் காரணம்
பேடிஎம் நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர் தளத்தினை மேம்படுத்தியுள்ளது. இது லாபத்தினை அதிகரிக்க வழிவகுக்கும் என நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக பேடிஎம்-மின் அதிகளவில் பரிவர்த்தனை செய்யும் MTU மதிப்பி, கடந்த ஆண்டினை காட்டிலும் 41% வரையில் அதிகரித்துள்ளது. இதே 25 மில்லியன் வணிகர்களையும் சேர்த்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Macquarie கணிப்பு என்ன?
சிட்டியின் இந்த கருத்தானது Macquarie நிறுவனம் ஒழுங்குமுறை தாக்கலின் மத்தியின் இந்த நிதி நிறுவனத்திற்கு வங்கி உரிமம் பெறுவதில் சிக்கல் இருக்கலாம் என்று கூறிய நிலையில், சிட்டி குழுமம் அதற்கு எதிர்மாறான கணிப்பினை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு Macquarie 1200 ரூபாயாக இலக்கு நிர்ணம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாயாக குறைத்தது. இதே மார்ச் மாதத்தில் 450 ரூபாயாகவும் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் இதற்கு எதிர்மாறாக சிட்டி குழுமத்தின்ம் நேர்மறையாம கணிப்பு வந்துள்ளது
இன்றைய பங்கு நிலவரம் என்ன?
பேடிஎம்மின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 3.910% அதிகரித்து, 687.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 694.50 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 669.30 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 521 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 3.78% அதிகரித்து, 686.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 693.90 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 669 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 520 ரூபாயாகும்.
Citi analysts says Paytm concerns are too pessimistic
Citi analysts says Paytm concerns are too pessimistic/பேடிஎம் பங்கு பற்றியே கவலைபடாதீங்க.. நம்பிக்கை கொடுத்த சிட்டி!