பொது மக்களுடனான நல்லுறவை மேம்படுத்துவது எப்படி? – ஆலோசித்த காவல்துறை!

பொதுமக்கள் – காவல் துறை நல்லுறவை மேம்படுத்தும் விதமாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்துள்ளனர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர். சந்திப்பின்போது, நலச்சங்க நிர்வாகிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைகளை கேட்டறிந்தனர்.
சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் மற்றும் பொதுமக்கள் காவல்துறை நல்லுறவை மேம்படுத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்ற தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் வசிக்குமிடங்களில் உள்ள குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
image
இதன் தொடர்ச்சியாக கடந்த 16.04.2022 அன்று சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து காவல் துறை மற்றும் பொதுமக்களிடைய நல்லுறவு ஏற்படும் விதமாக கலந்துரையாடினர்.
சென்னை காவல்துறை வடக்கு மண்டலத்தில் 17 இடங்களில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 579 பொதுமக்களும், மேற்கு மண்டலத்தில் 44 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 1040 பொதுமக்களும், கிழக்கு மண்டலத்தில் 23 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 537 பொதுமக்களும், தெற்கு மண்டலத்தில் 55 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 1680 பொதுமக்களும் என மொத்தம் நான்கு மண்டலங்களிலும் 139 இடங்களில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் 3,836 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
image
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், அதன் உபயோகம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை அமைக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தனியாக வசிக்கும் முதியோர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் பூட்டிய வீடுகள் குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தேவைப்படும் இடங்களில் காவலாளிகள் நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. பொதுமக்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், குடியிருப்பில் அவசியமின்றி யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து ஏதாவது, சந்தேக நபர்கள், குற்றச்சம்பவங்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும் காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்களை அவர்களுக்கு வழங்கினர்.
image
குடியிருப்பு நலசங்க நிர்வாகிகள் காவல் துறையினரின் அறிவுரைகளை கேட்டு நடப்பதாகவும், தங்களது பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை கேட்டு கொண்டுள்ளது. இது போன்று பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: “வேலையில் இருப்பவரைத் திருமணம் செய்துகொள்” – மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கணவன் தற்கொலை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.