போக்குவரத்து அமைச்சருக்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்சமயம் இடம்பெறுகிறது.
பஸ் உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வருவதே நோக்கம் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளதனால், நாடளாவிய ரீதியில் பஸ் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.