டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பைச் சந்தித்தித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சிஏஜி தோலூரித்து காட்டி உள்ளது.
இந்தியாவின் தலைமை ஆடிட்டர் ஜெனரல், இந்தியாவில் ரயில்வே துறை குறித்த தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ரயில்வே தனது ரயில்களை விரைவுபடுத்தவும், சரியான நேரத்தில் பணியை மேம்படுத்தவும் ஒரு தசாப்தத்தில் ரூ. 2.5 லட்சம் கோடி செலவழித்து உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, 2016-17ல் ‘மிஷன் ரஃப்தார்’ செயல்படுத்தியும் அதை சரி செய்ய முடியவில்லை. இந்தியாவில் ரயில்களின் வேகம் மிகக்குறைவு, மேலும சரியான நேரத்தில் இலக்கை அடைவதும் இல்லை, அதனால், வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதுடன், ரயில்வே துறையின் விவேகமற்ற முடிவால், இரயில்வே பொதுத்துறை நிறுவனமான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பைச் சந்தித்தது உள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறை சார்ந்த அறிக்கைல், மத்தியஅரசு மத்தியஅரசு ரயில்வே த்துறையை மேம்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளது.
இந்திய ரயில்வே 2008 முதல் 2019 வரை பாதை உள்கட்டமைப்பில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு செய்த போதிலும், இயக்கம் விளைவுகளை மேம்படுத்தத் தவறிவிட்டது சிஏஜி கண்டறிந்துள்ளது. எதிர்கால சரக்கு போக்குவரத்திற்காக மார்ச் 2019 இல் தேசிய டிரான்ஸ்போர்ட்டருக்கு முன்பணத்தை செலுத்தத் தேர்ந்தெடுத்ததன் விவேகமற்ற முடிவால், இரயில்வே பொதுத்துறை நிறுவனமான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பைச் சந்தித்தது எப்படி என்பதையும் அது கோடிட்டு காட்டி உள்ளது.
2018-19 நிதியாண்டு முடிவதற்கு முன்பாகவே CONCOR பணம் செலுத்தியது, இது ரயில்வேயின் நிதிநிலையில் ஒரு ரோசி படத்தை வரைவதற்கு உதவியது. இது முதல் தவணையாக ரூ.3,000 கோடியை டெபாசிட் செய்தது, இதற்காக நிறுவனம் ரூ. 2,300 கோடி நிலையான வைப்புத்தொகையை பணமாக்கியது மற்றும் 8.45% வட்டி விகிதத்தில் ரூ.700 கோடி செயல்பாட்டு மூலதனக் கடனையும் எடுத்துள்ளது என தெரிவித்து உள்ளது.
எந்தவொரு ரயிலும் குறிப்பட்ட நேரத்தில், அதற்கான இடத்ததை சென்றடைவது இல்லை என்றும், ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக முதலீடு இருந்தபோதிலும், இந்தியாவின் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 50 கிமீ வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன, நீண்ட நேரம் நிற்கின்றன மற்றும் சரியான நேரத்தில் செல்லவில்லை என்று CAG கூறுகிறது.
ஆண்டுக்கு சராசரியாக 200 ரயில் சேவைகளை மத்தியஅரசு அறிமுகப்படுத்தினாலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டி இருப்பதுடன், இதனால் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை என்றும், தற்போதுள்ள சராசரி வேகத்தை மணிக்கு 50ல் இருந்து 75 கிலோ மீட்டராக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டலும் உட்கட்டமைப்பு குறைபாடுகளால் வேகம் உயர்த்தப்படவில்லை, வேகத்தை உயர்த்த வேண்டும் என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு முந்தைய 7 ஆண்டுகளில் ரயில்களின் வேகத்தை ஆய்வு செய்ததில் 2.1% எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 75 கிமீ-ஐ விட அதிகமாகவும் 37% எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்திலும் 9.4% ரயில்கள் மணிக்கு 40 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது ரயிலின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது, இதற்கு நிர்வாக கோளாறுகள் காரணம் என்றும் குறிப்பிடுள்ளது. நிர்வாக குளறுபடிகளால் 7 ஆண்டுகளில் 69% ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள் தாமதத்தால் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் சிக்கல் நிலவுவதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, தற்போதுள்ள ரயில் உள்கட்டமைப்பில் பயணிகள் ரயில்களின் அழுத்தம் அதிகரிப்பதே மெதுவான வேகத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படும் மற்றும் சேருமிடத்திற்கும் இடையே பயணம் செய்யும் நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில், நாட்டில் இயங்கும் 2,951 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சராசரி வேகத்தை சிஏஜி கணக்கிட்டது. இதில், 2.1 சதவீதம் (62 ரயில்கள்) சராசரியாக மணிக்கு 75 கி.மீ வேகத்திலேயே செல்கின்றன. பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (37 சதவீதம்) சராசரியாக மணிக்கு 55-75 கிமீ வேகத்தில் செல்கின்றன. சராசரியாக மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் 933 ரயில்கள் (31 சதவீதம்) இருந்தன. சுமார் 269 அல்லது 9.4 சதவீத எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்கிறது என்பதையும் சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது.
அததுடன், சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மற்ற பயணிகள் ரயில்களின் வேகத்தைக் குறைக்கும் செலவில் வந்துள்ளதாகவும் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
2012-13 ஆம் ஆண்டில், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக 1,000 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 19 மணிநேரம் 52 நிமிடங்கள் எடுக்கும், இது 2019-20 இல் 19 மணி 47 நிமிடங்களாக குறைந்துள்ளது.
2012-13ல் 1,000 கி.மீ தூரத்தை கடக்க 27 மணி நேரம் 37 நிமிடங்கள் எடுக்கும். 2019-20 ஆம் ஆண்டில், இந்த ரயில்கள் அதே தூரத்திற்கு 29 மணி 51 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.
இதேபோல், 2012-13 ஆம் ஆண்டில், வழக்கமாக சிறிய தூரம் பயணிக்கும் மின்சார மல்டிபிள் யூனிட்கள் (EMUs) 50 கிமீ தூரத்தை கடக்க 1 மணிநேரம் 13 நிமிடங்கள் எடுத்தன, மேலும் 2019-20 ஆம் ஆண்டில், அவை 6 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்கின்றன.
மேலும், அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் (எம்.பி.எஸ்) உள்ளது, இது வரை குறிப்பிட்ட தடங்களில் ரயில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த MPS நீண்ட காலமாக புதுப்பிக்கப்படவில்லை என்று தணிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் உள்ள ராஜ்தானிகள், சதாப்திகள், சம்பர்க் கிராந்திஸ், ஜன் சதாப்திஸ், ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், கதிமான் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய அனைத்து சிறப்பு ரயில்களின் நேர அட்டவணைகள் மற்றும் தூரங்களை கணக்கிட்டதில், “சூப்பர் பாஸ்ட்” ரயில்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் கூட இல்லை என்று பகுப்பாய்வு காட்டுகிறது.
2007 ஆம் ஆண்டு முதல், இந்த அனைத்து ரயில்களும் “சூப்பர் பாஸ்ட்” கட்டணத்தை வசூலித்துள்ளன, ஏனெனில் மூலத்திற்கும் சேருமிடத்திற்கும் இடையே சராசரி வேகம் மணிக்கு 55 கிமீக்கு மேல் உள்ளது.
டெல்லி-ஜான்சி கதிமான் எக்ஸ்பிரஸ் நாட்டின் அதிவேக ரயிலாக 403 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 4.3 மணி நேரத்தில் கடக்கிறது – சராசரியாக மணிக்கு 93.1 கிமீ வேகம்.
இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் – ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கும் மற்றொன்று வாரணாசிக்கும் செல்லும் – சராசரியாக மணிக்கு 88 கி.மீ.
தேஜஸ் ராஜ்தானி மற்றும் சாதாரண தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் – சமீபத்திய தேஜஸ் ரேக்கில் இயங்கும் – சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 78.3 கிமீ மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 76.4 கிமீ மட்டுமே. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் – நாட்டின் முக்கிய தலைநகரங்களை தேசிய தலைநகரான டெல்லியுடன் இணைக்கிறது.
மத்தியஅரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சிஏஜி தோலூரித்து காட்டி உள்ளது.
ரயில்களின் வேகம் குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயம் என்று வல்லுநர்கள் விவரிக்கிறார்கள், அது தீர்க்கப்படாமல் விட்டால், அது ரயில்வேக்கு நிதிப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.