டெல்லியில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
டெல்லியில் கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தொற்று பரவல் தடுப்பு தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் நாளை டெல்லி அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
இதில் டெல்லியில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குவதுடன் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் முறையை கொண்டு வரவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆன்லைன் வகுப்பறை முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது. இதற்கிடையே டெல்லியை ஒட்டியுள்ள தங்கள் மாநில மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை உத்தரப்பிரதேச அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதே போல டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் உள்ளிட்ட தங்கள் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களிலும் முகக்கவசத்தை ஹரியானா அரசு கட்டாயமாக்கியது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM