முப்படைகளுக்கு தலைமை தளபதியாகிறாரா மனோஜ் முகுந்த் நரவனே? நியமனம் பற்றிய விவரங்கள்

தமிழ்நாட்டின் குன்னூரில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது பதவிக்கு அடுத்து யார் நியமிக்கப்படுவர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே அடுத்த ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு முப்படைகளுக்கு தலைமை தளபதி நியமனம் செய்வதற்கான முயற்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த முக்கிய பதவிக்கு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது ராணுவத்தின் தளபதியாக பணியாற்றி வரும் மனோஜ் முகுந்த் நரவனே இந்த மாத இறுதியில் பதவி ஓய்வு பெற்ற பிறகு அவரை முப்படைகளின் தலைமை நீதிபதியாக நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
image
ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஏப்ரல் 30 ஆம் தேதி பதவி ஓய்வு பெறும் நிலையில், மே 1ஆம் தேதி தற்போது ராணுவத்தில் இரண்டாவது மூத்த அதிகாரியாக உள்ள லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமை பொறுப்புக்கு வருகிறார். மத்திய அரசு திங்கட்கிழமை லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பதவி உயர்வு பெறுகிறார் என்பதை அறிவித்துள்ளது. அவர் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு ஓய்வு பெறும் ரணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே அடுத்த முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஆலோசனை நடத்தும் என பாதுகாப்பு துறை அமைச்சக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. 
தற்போதைய கப்பல் படை தளபதி அட்மிரல் ஹரி குமார் மற்றும் இந்திய விமானப்படை தளபதி ஏர் சிப் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி ஆகியோர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஒன்றாக படித்தவர்கள். அவர்கள் படித்த 63 ஆவது வரிசையில்தான் ராணுவ தளபதியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேயும் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
image
ஆகவே இந்த மாத இறுதியில் லெப்டினன் ஜெனரல் பாண்டே ராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றவுடன், இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளும் ஒரே சமயத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்கிற நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் இவர்களுக்கு முன்பே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றால், பணிச்சூழல் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 1982 ஆம் வருடம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தனது பயிற்சியை முடித்து, ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவில் இணைந்தார். அவர் இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவு, பாகிஸ்தான் எல்லை, லடாக் மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றியுள்ளார்.
சமீபத்திய செய்தி: குடியரசு தலைவர் வேட்பாளராகிறாரா இளையராஜா? பாஜக-வின் வியூகம் இதுதானா? முழு விவரம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.