Tamil memes news: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் மீம்ஸ்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களது உடல்நிலையை தங்களது மருத்துவ குழு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தலால் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் புனேயில் நாளை இரவு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி – பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று பாதிப்பால் டெல்லி அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் #CancelIPL என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியது. இந்த நிலையில் இது தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.



அக்னி வெயில் மீம்ஸ்:
கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அடை மழை காலம் போல் மழை பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அக்னி வெயில் என்ன சொல்கிறது என்பது போன்ற மீம்ஸ் பகிர்ந்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் ‘இன்றைய வைரல்’ மீம்ஸ்:










“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“