ஆமதாபாத் : இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்னாத்துக்கு, குஜராத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, பிரவிந்த் குமார் ஜகன்னாத், பிரதமராக உள்ளார். இந்திய வம்சாவளியான இவர், எட்டு நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள விமான நிலையத்திற்கு, நேற்று மாலை வந்திறங்கிய ஜகன்னாத்துக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு, அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
ஜாம்நகரில் கட்டமைக்கப்பட உள்ள, பாரம்பரிய மருந்துகளுக்கான, உலக சுகாதார அமைப்பின் மையத்திற்கு, இன்று, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவில், மொரீஷியஸ் பிரதமர் ஜகன்னாத் பங்கேற்கிறார். பின், நாளை நடக்கும் ஒரு முதலீடு தொடர்பான மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார்.
Advertisement