ரஜினி எடுக்கும் மெஹா ரிஸ்க்: தலைவருக்கு இதெல்லாம் சாதராணம்ப்பா.!

‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார் விஜய். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே
பீஸ்ட்
படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது.

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் லோகேஷ்: மாஸ் காட்டும் ஆண்டவர்..!

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இதனால் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவியதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘தலைவர் 169’ பட இயக்குனர் என குறிப்பிட்டுள்ளார் நெல்சன்.

‘பீஸ்ட்’ பட விமர்சனத்தால் மன உளைச்சலில் இருந்த நெல்சனை அழைத்து சீக்கிரமே படத்தை தொடங்கலாம். தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்துமாறும் ஆறுதல் கூறியுள்ளாராம் ரஜினி. ஏற்கனவே ‘அண்ணாத்த’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றலாம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்நிலையில் ‘தலைவர் 169’ படத்திற்காக ரஜினி மீண்டும் ரிஸ்க் எடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரஜினி சார் யோசிக்கனும; Beast FDFS Review!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.