ரஷ்யா கிராமம் மீது உக்ரைன் படைகள் குண்டு போட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 54வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், டான்பாஸில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதாக உக்ரேனிய ஜானதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எல்லைக்கு அருகே அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று பெல்கோரோட் நகரில் உள்ள Golovchino கிராமம் மீது உக்ரைன் படைகள் பீரங்கி மூலம் குண்டு மழை பொழிந்ததாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நடத்திய தாக்குதலில் Golovchino கிராமத்தில் பல வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் மற்றும் பெண் ஒருவர் காயமடைந்ததாக அவர் கூறினார்.
எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது.. அது திராவிடரா? கிண்டலடித்த சீமான்
காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைன் தாக்குதலில் Golovchino கிராமத்தில் வீடுகள் சிதைந்த கிடக்கும் புகைப்படத்தை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எனினும், இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.