உக்ரைன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் கீழ் ரஷ்ய டேங்கர் கப்பலை கிரீஸ் கைப்பற்றியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ஈவியா தீவில் (Evia) ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை கிரீஸ் கைப்பற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிரான புதிய கடுமையான தடைகளை ஏற்றுக்கொண்டதால், சில விதிவிலக்குகளுடன், 27-நாடுகளின் துறைமுகங்களில் இருந்து ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்களை தடை செய்தது.
ரஷ்யக் கொடியுடன் கூடிய பேகாஸ் (Pegas) என்ற அந்த கப்பல், 19 ரஷ்ய பணியாளர்களுடன், தலைநகர் ஏதென்ஸுக்கு அருகிலுள்ள கிரேக்க நிலப்பரப்பில் இருந்து எவியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள Karystos அருகே கைப்பற்றப்பட்டது.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் ஒரு பகுதியாக இது கைப்பற்றப்பட்டுள்ளது” என்று கிரேக்க கப்பல் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேகாஸ் கப்பலில் இன்ஜின் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் Karystos-க்கு சற்று அருகில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று ஏதென்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.