வசூலில் அதிரடி காட்டும் ‘கே.ஜி.எஃப். 2’ – 6 நாட்களில் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு?

நடிகர் யஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் பாலிவுட்டில் மட்டும், ஒரேவாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

2022-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, ‘கே.ஜி.எஃப். 2’. ஏனெனில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகம், மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்களிடையே இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில், பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

எனினும், படம் வெளியீட்டிற்கு முன்னதாக கொரோனா பரவல் அதிகரித்ததால், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும், ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், எதிர்பார்ப்புகளையும் மீறி வசூலிலும், விமர்சன ரீதியாகவும், அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

image

இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியான 5 நாட்களில், ஒட்டுமொத்தமாக 617.45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. படத்திற்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுவதால், 2 வாரங்களில் வசூலில் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ‘கே.ஜி.எஃப். 3’ படம் 2023-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.