வருவாய் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டு புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். வருவாய் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்துப் பேசும்போது கூறியதாவது:

பட்டா, முதியோர் ஓய்வூதியம்உட்பட வருவாய் துறையின் பல்வேறு சேவைகளுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைஉள்ளது. சான்றிதழ்கள் விரைவாககிடைக்கும் வகையில் இந்த நடைமுறை மேலும் எளிதாக்கப்படும். வருவாய் துறை முற்றிலும் கணினிமயம் ஆக்கப்படும்.

கடந்த ஓராண்டில் 2.94 லட்சம்பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளில் காலி இடங்கள் நிரப்பப்படும்.

2 நாட்கள் குறைதீர்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் 2 நாட்கள் நேரடியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தி, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டு வருகிறோம். பட்டா வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க, காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து புதிதாக திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தைசீரமைத்து புதிதாக வாணாபுரம் வட்டம் தோற்றுவிக்கப்படும்.

சென்னை மாவட்டம் மாதவரம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கரூர் மாவட்டம் கடவூர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய 4 வட்டங்களில் சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிடங்கள் உருவாக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் 274 கிராமநிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதிதாக 50 வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ) அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் ரூ.13.50 கோடியில் கட்டப்படும். நாகப்பட்டினம் நகராட்சி நம்பியார் நகரில் ரூ.6 கோடியில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்படும். மாவட்டங்களில் உள்ளமாவட்ட அவசர செயல்பாட்டு மையம் ரூ.1.50 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

ரூ.2.47 கோடியில் மீட்பு வாகனம்

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் திறன்களை மேம்படுத்த ரூ.2.47 கோடியில் மீட்பு வாகனங்கள் வாங்கப்படும்.

சென்னையில் உள்ள அண்ணாநிர்வாக பணியாளர் கல்லூரியில்இயங்கும் பேரிடர் மேலாண்மைமையம், சிறப்பு தகுதி மையமாக தரம் உயர்த்தப்படும்.

நகர்ப்புற புல வரைபடத்தை (TSLR Sketch) இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டுவரப்படும்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்வட்டம் நாரைக்கிணறு கிராமத்தில் 1,500 குடும்பங்கள், கடலூர்மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் விஜயமாநகரம், புதுக்கூரைப்பட்டி கிராமங்களில் 3,000 குடும்பங்கள் பட்டா பெறும் வகையில் அசல் நிலவரி திட்டம் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்புன்னக்காயல் கிராமத்தில் அரசுநிலத்தில் வசிப்போருக்கு வகைப்பாடு மாற்றம் செய்து 800 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நரசிங்கராயன்பேட்டை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும். இதன்மூலம் 350 குடும்பங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.