வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை: சாலை வரியை அதிகரிக்கும் டெல்லி அரசு

தலைநகர் டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கான வரியை உயர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டின் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் டெல்லி அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Delhi Government to redesign city roads at a cost of Rs 5,000 crore - The  Economic Times

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு மானியங்கள், வரிவிலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் போன்ற மற்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான சாலை வரியை அதிகரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை வழங்கிய பரிந்துரைகளை டெல்லி அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் பல்வேறு தரப்பிலும் ஆலோசனைகள் நிறைவடைந்து அதற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Central govt officials in Delhi should hire only electric vehicles: FinMin  | Business Standard News

தனி நபரின் பெயரில்  வாங்கப்படும் வாகனங்களுக்கு 4% முதல் 12.5 சதவிகிதம் வரையும், நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரையும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என டெல்லி அரசு திட்டமிடுகிறது. ஏற்கனவே பேட்டரி உள்ளிட்டவற்றில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.