விஜய்க்கு ஐஸ் வைக்கும் பிரபல ஹீரோயின்… கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர்
விஜய்
. இவர் படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் வராது. அதற்கு சமீபத்தில் வெளியான
பீஸ்ட்
திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

பீஸ்ட் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் வசூலில் அடித்து நொறுக்கிவருகின்றது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில்
தளபதி 66
என்று அழைக்கப்படும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றது.

தனுஷை நம்பியிருக்கும் அவர்கள்..! காப்பாற்றுவாரா தனுஷ் ?

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையாக
ராஷ்மிகா
நடிக்கின்றார். பிரபல இசையமைப்பாளரான தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் விஜய்யின் படங்களில் நடிப்பதற்காக பல நாயகிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் விஜய்யை போல ஒரு உச்சநட்சத்திரத்தின் படத்தில் நடித்தால் அவர்களுக்கு மார்க்கெட்டும் உயரும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகலாம் என்பதற்காக பல இளம் நாயகிகள் விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளனர்.

மேலும் இளம் நாயகிகளை தவிர சில முன்னணி நாயகிகளும் விஜய்யுடன் நடிக்கவென்றும் என்று ஆசையாக உள்ளனர். அதில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரும் ராஷ்மிகா போல விஜய்யின் தீவிர ரசிகைதான்.

ஏற்கனவே விஜய்யுடன் பைரவா மற்றும்
சர்க்கார்
படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் நடக்கவேண்டும் என்று முயற்சித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன் சமுகப்பக்கங்களில் விஜய் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிடுவார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் தளபதி 67 படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஐஸ் வைப்பதாக கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.