வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடைபெற்றுவரும் சூழலில், ரஷ்ய வீரர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட்போன் காப்பாற்றிய நிகழ்வு நடந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 55வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் ரஷ்ய வீரர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் உக்ரைன் வீரர் தான் பையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனால் உயிர் பிழைத்துள்ள அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. சுமார் 7.2 மி.மீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா ஒன்று ஸ்மார்ட்போனில் பட்டு அதிலேயே செருகி, வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், உடனிருக்கும் வீரரிடம் தன்னுடைய பையில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து காண்பிப்பது போலவும், போனில் தோட்டா செருகி இருப்பதும் இடம்பெற்றுள்ளது. தலைக்கு வந்தது தலைபாகையுடன் சென்றது என்பது போல், உயிர்துழைக்க வந்த தோட்டா, ஸ்மார்ட்போனால் தடுக்கப்பட்ட நிகழ்வால் உக்ரைன் வீரரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement