வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர்
ஜெயமோகன்
எழுதி வெளிவந்த ‘
துணைவன்
’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர்
சூரி
கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சூரியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்
விஜய் சேதுபதி
நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை
பவானி ஸ்ரீ
கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு
இந்த படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இறுதிக்கட்டமாக நடைபெறும் இந்த படப்பிடிப்பிற்காக கிராமம் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்பட உள்ளது. இதற்காக பிரபல சண்டை கலைஞர்
பீட்டர் ஹெய்ன்
தலைமையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விரைவில் படப்பிடிப்பு நிறைவுபெற்று அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!