டெல்லி: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள டிஜிட்டல் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.