ஷியா பிரிவினரை குறிவைத்து காபூல் பள்ளியில் தாக்குதல்: பலர் உயிரிழப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காபூல்: மேற்கு காபூலில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இன்று (ஏப்.,19) ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பலர் இறந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கனில் தலிபான்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சன்னி பிரிவினரான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

latest tamil news

அந்த வகையில் இன்று மேற்கு காபூலில் உயர்நிலைப் பள்ளி உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 4 பேர் இறந்துள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலுள்ளவர்கள் ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகளின் இலக்குகளாக உள்ளனர் என காபூல் தளபதியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.