காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு படங்களில் பிசியாகிவிட்டார்
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த். 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்குகிறார்.
ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மேலும் ஒரு இந்தி படத்தை இயக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா கூறியதாவது,
நடிகர்கள்
ரித்திக் ரோஷன்
, ரன்வீர் சிங்கை வைத்து விரைவில் படம் இயக்க விரும்புகிறேன். இதற்கு முன்பும் கூட எனக்கு இந்தி படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பொழுது வேலை செய்யும் மனநிலையில் நான் இல்லை.
இந்திய சினிமா மேம்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். வித்தியாசமாக யோசிக்க இயக்குநர்களுக்கு ரசிகர்கள் தான் சுதந்திரம் கொடுக்கிறார்கள். இது சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் என்றார்.
தனுஷை பிரிந்த கையோடு பயணி எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார் ஐஸ்வர்யா. அது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது.
அந்த வீடியோவை பார்த்து ஐஸ்வர்யாவை பாராட்டுபவர்கள் பாராட்டினாலும், இதெல்லாம் ஒரு படைப்பா என்று விளாசவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு