108MP மெகாபிக்சல் கேமராவுடன் காத்திருக்கும் சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

நாட்டின் மிகப்பெரும் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய பிரீமியம் பட்ஜெட் ரக
Samsung Galaxy
M53 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் ஏற்கனவே இந்த போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி
ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவில் கால்பதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங்கின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போனில்
MediaTek Dimensity 900 5G
சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், அமோலெட் டிஸ்ப்ளே, 108MP கேமரா போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, Galaxy M53 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 22 அன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 27 அன்று ரிலீசாகும் சியோமியின் புதிய அவதாரம்!

சாம்சங் கேலக்ஸி எம்53 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy M53 5G Specifications)

சாம்சங் Galaxy M53 5G ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதால், அதன் விவரக்குறிப்புகள் நமக்கு தெரிய வந்துள்ளன. இந்த போன் 6.7″ அங்குல முழுஅளவு HD பிளஸ் AMOLED திரையைக் கொண்டிருக்கும். மேலும் இதில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்கும். கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் இந்த டிஸ்ப்ளேயில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இந்த போனில் அதிகபட்சமாக 8GB ரேம், 128GB வரை ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்பட்டிருக்கும். MediaTek டிமென்சிட்டி 900 5ஜி புராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும்.

ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!

சாம்சங் கேலக்ஸி எம்53 கேமரா
(Samsung Galaxy M53 5G Launch Date in India)

புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை, நான்கு கேமராக்கள் கொண்ட குவாட் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 108MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா முன்பக்க டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளாது. அதனை ஊக்குவிக்க 25W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.1, வைஃபை, இரட்டை 5ஜி சிம் போன்ற இணைப்பு ஆதரவினையும் சாம்சங் போன் பெறுகிறது.

விலையைப் பொருத்தவரை, இந்தியாவில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.25,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்டின் விலை 30,000க்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய சந்தையில் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த உங்கள் பார்வையை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.
லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.