2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக இந்த சேவை நடைபெறவில்லை.
இந்த சூழ்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளது.
இதனால் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.சென்ற ஆண்டை விட இந்தஆண்டு பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் 2838 விமானங்கள் இயக்கப்பட்டன.இதன் மூலம் சுமார் 4லட்சத்து 7 ஆயிரத்து 975 பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக விமான போக்குவரத்துதுறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
விரைவில் அகமதாபாத்தில் இருந்து மஸ்கட்டுக்கும் , மும்பையில் இருந்து டாக்கா மற்றும் ரியாத்துக்கும், கோழிக்கோட் டில் இருந்து ரியாத்துக்கும், நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.