“மூன்று நாட்களுக்கு முன்பு நானும் கார் மாறி ஏற முயன்றேன்” என்று உதயநிதி நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பங்கேற்றுவிட்டு வெளியில் வந்த உதயநிதியை வழியனுப்ப அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்தனர்.
அப்போது, சில தினங்களுக்கு முன்பு உதயநிதி காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றதை குறிப்பிட்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தானும் கார் மாறி எடப்பாடி பழனிசாமி காரில் ஏற சென்றதாகவும் ஆனால், காரின் முகப்பில் ஜெயலலிதா புகைப்படம் இருப்பதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டு திரும்பி விட்டதாகவும் நண்பர்களிடம் நகைச்சுவையாக கூறினார் உதயநிதி.
இதைக்கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “இப்படியே போச்சுன்னா பக்கத்துல யாரு இருக்கான்னு தெரியாமல் பேசிட்டே போக வேண்டியதுதான்”
என்றுக்கூற அனைவரும் அந்த இடமே சிரிப்பால் சூழ்ந்தது.