குறுகிய காலத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெற யாருக்கும் தான் ஆசை இருக்காது, அப்படிப்பட்ட ஒரு நிறுவன பங்காக விளங்குகிறது எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 3 மாத காலத்தில் சுமார் 13 மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!
இதனால் ரீடைல் முதலீட்டுச் சந்தையில் SEL மேனுஃபேக்ச்சரிங் நிறுவனப் பங்குகளுக்கு மவுசு அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்யும் முன்பு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங்
எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங் நிறுவனம் பல டெக்ஸ்டைல் பொருட்களைத் தயாரித்து வருகிறது. குறிப்பாக நூல் தயாரிப்பு, பிராசசிங், வர்த்தகத்தில் முன்னோடியாக விளங்குகிறது. நூல்-ஐ தாண்டி துணி, ரெடிமேட் ஆடைகள், பல தரப்பட்ட டவல்களைத் தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்து வருகிறது.
1,218 சதவீதம் உயர்வு
எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங் பங்குகள் கடந்த மூன்று மாதங்களில் 1,218 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஜனவரி 18, 2022 அன்று ரூ.55.35 இல் முடிவடைந்த பங்கு, இன்று (ஏப்ரல் 19) BSE இல் அதிகபட்சமாக ரூ.729.65 ஆக உயர்ந்தது. மூன்று மாதங்களுக்கு முன் எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங் பங்குகளில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று ரூ.13.18 லட்சமாக உயர்ந்திருக்கும்.
6 மாத உயர்வு
இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு 5.77 சதவீதம் சரிந்தது. எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங் பங்குகள் கடந்த 5 நாளில் 21.53 சதவீதமும், 1 மாதத்தில் 128.98 சதவீதமும், 6 மாதத்தில் 14,463.87 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஏப்ரல் 19 வர்த்தகம்
இன்று பிஎஸ்இ-யில் இந்தப் பங்கு 5 சதவீதம் உயர்ந்து ரூ.729.65 ஆக உயர்ந்து, 52 வார உயர்வைத் தொட்டது. அக்டோபர் 28, 2021 அன்று 52 வார சரிவு அல்லது குறைவான விலையான ரூ.4.78 எட்டியது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 46.53 கோடி ரூபாயாக உள்ளது.
தொடர் நஷ்டம்
எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங் பங்குகள் மார்ச் 2021 முதல் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். கடந்த எட்டு நிதியாண்டுகளில், 7 வருடம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
டிசம்பர் 2021 காலாண்டில், நிகர இழப்பு 42.69 சதவீதம் குறைந்து ரூ.28.30 கோடியாக இருந்தது, அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.49.38 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2020 டிசம்பர் காலாண்டில் ரூ.80.54 கோடியாக இருந்த விற்பனை கடந்த காலாண்டில் 45.63 சதவீதம் அதிகரித்து ரூ.117.29 கோடியாக உள்ளது.
SEL Manufacturing: New multibagger in textile industry; clocked 1218 percent growth in 3 months
SEL Manufacturing: New multi-bagger in the textile industry; clocked 1218 percent growth in 3 months 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதபோய் மிஸ்பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!