புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரம் சரிந்த நிலையில், சில நாட்களாக மீண்டும் ஏறு முகத்தில் உள்ளது. குறிப்பாக, டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம், கோடை விடுமுறையால் சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரே மாதிரியாக உள்ளதா அல்லது வேறுபாடுகள் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். தற்போதை பாதிப்பு அதிகரிப்பு 4வது அலைக்கான அறிக்குறி இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒருவர் மட்டும் பலி: நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,183 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்றைய பாதிப்பு 1,247 ஆக சரிந்தது. உத்தரபிரதேசத்தில் மட்டும் ஒருவர் பலியாகி உள்ளார்.