ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் எப்படியாவது டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஆனால் இதற்கு ட்விட்டர் இயக்குநர் குழு, ஊழியர்கள் முதலீட்டாளர்கள், நிறுவனம் எலோன் மஸ்க் கைவசம் செக்ல்வதை விரும்பவில்லை.
எலாஸ் மஸ்க் வாங்குவதை தடுக்க, ‘பாய்ஸன் பில்’ என்ற முறையை, நிர்வாகக் குழு கையாண்டுள்ளது. வாரியத்தின் இந்த திட்டத்தால், எலோன் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்துவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாய்ஸன் பில் என்றால் என்ன?
பாய்ஸன் பில் என்பது ஒரு நபர் அல்லது குழு ஒரு நிறுவனத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கும் போது பயன்படுத்தப்படும் ஒரு உத்தி. ட்விட்டர் விஷயத்திலும் இதேதான் நடக்கிறது. இந்த மூலோபாயம் அந்த தனிநபர் அல்லது குழு நிறுவனத்தை கையகப்படுத்துவதை கடினமாக்கும்.
பாய்ஸன் பில் உத்தியின் கீழ், சலுகை விலையில் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்க இயக்குநர்கள் குழுவிற்கு நிறுவனம் அனுமதிக்கிறது. இதன் மூலம் கையகப்படுத்த முயற்சிக்கும் நபரின் பங்குகளின் மதிப்பைக் குறைத்து, கையகப்படுத்துவதை கடினமாக்கும். அதாவது, நிறுவனத்தை வாங்க நபர் அல்லது குழு அதிக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அவசர காலங்களில் பாய்ஸன் பில் உத்தி பயன்படுத்தப்படுகிறது. இயக்குநர்கள் குழு தங்கள் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் எழுகின்றன.
மேலும் படிக்க | Elon Musk – Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்
1980களில் பாய்ஸன் பில் உத்தி அதிகம் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், வணிகர்கள் சந்தையில் இருந்து நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் வாங்குவதன் மூலம் வலுக்கட்டாயமாக நிறுவங்களை கையகப்படுத்த் முயன்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாய்ஸன் பில் உத்தியை பின்பற்றி இந்தத் திட்டத்தைப் நிறுவனங்கள் முறியடித்து தன்னை காத்துக் கொண்டுள்ளன.
எலோன் மஸ்க் Vs ட்விட்டர்
ட்விட்டரை கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட விலை மிகவும் குறைவு என்று இயக்குநர்கள் குழு நினைக்கிறது. மறுபுறம், எலோன் மஸ்க் சொன்ன விலைக்கு மேல் கொடுக்கவும் தயாராக இல்லை. இயக்குநர்கள் குழுவின் நிலைப்பாட்டை பார்க்கும்போது, எலோன் மஸ்க் இப்போது ட்விட்டரை எப்படியாவது கையகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வரும் நிலையில், அதனை தடுக்க பாய்ஸன் பில் என்ற உத்தியை இயக்குநர் குழு கையாண்டுள்ளது.
எலோன் மஸ்க் வசம் 9% பங்குகள்
ட்விட்டரின் அதிக பங்குகளை வைதிருக்கும்பங்குதாரர்களில் ஒருவர் மஸ்க். ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை மஸ்க் ஏற்கனவே வாங்கியுள்ளார். அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான வான்கார்ட் குரூப், ட்விட்டரில் அதிகபட்சமாக 10.3 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் தலால் 5.2 சதவீத பங்குகளை வைத்துள்ளார். ஒரு தனிநபர், குழு அல்லது நிறுவனம் Twitter இன் நிலுவையில் உள்ள பொதுவான பங்குகளில் 15% வாங்க முயற்சிக்கும் போது மட்டுமே இந்த பங்குதாரர்கள் அதனை உரிமையாக்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் ஏப்ரல் 14, 2023 வரை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR