IPL 2022 LSG VS RCB Live Score Updates IN TAMIL: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரை தோல்வியுடன் தொடங்கிய இவ்விரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தன. ஆனால், தொடர்ந்து விளையாடிய 5வது ஆட்டத்தில் தோல்வி கண்டு, முந்தைய 6வது ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
பெங்களூரு அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஜோடி அமைக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோல், முன்னாள் கேப்டன் கோலி தற்போது வரை ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றி வருகிறார். கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் மிடில்-ஆடரில் சிறப்பாக மட்டையை சுழற்றி அணிக்கு வலு சேர்க்கின்றனர். ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ் போன்றோரின் தரமான பந்துவீச்சு அணிக்கு சமபலத்தை கொடுத்துள்ளது.
அறிமுக அணியான லக்னோவில் கேப்டன் கே.எல். ராகுல் – டி காக் ஃபார்ம், மார்கஸ் ஸ்டோனிஸ், இளம் வீரர்கள் தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி ஆகியோரின் அதிரடி ஆட்டம் என அந்த அணி அசுர பலம் பொருந்திய அணியாக வலம் வருகிறது. முந்தைய ஆட்டத்தில் சாம்பியன் அணியான மும்பையை வீழ்த்திய லக்னோ அணி அதே உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும். எனவே, புள்ளிப்பட்டியலில் 3வது (லக்னோ) 4வது (பெங்களூரு) இடத்தில் உள்ள இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்.
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 19 April 2022
Lucknow Super Giants
Royal Challengers Bangalore
Match Yet To Begin ( Day – Match 31 ) Match begins at 19:30 IST (14:00 GMT)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“