மோட்டோரோலா
ஸ்மார்ட்போன் பிராண்ட், தனது ஜி தொகுப்பில் புதிய மோட்டோரோலா ஜி52 போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிரீமியம் பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் கேமரா, 5000mAh பேட்டரி திறன், 30W டர்போ சார்ஜிங், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியன சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.
மோட்டோ ஜி52 அம்சங்கள் (Moto G52 Specifications)
புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் 6.5″ அங்குல 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட pOLED பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரேஞ் ஸ்மார்ட்போனில் pOLED டிஸ்ப்ளே இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி ஆதரவு வரை ஜி52 ஸ்மார்ட்போன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் எஞ்சினும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புராசஸர் பழையது என்றாலும், விலைக்கேற்ற தரத்துடன் ஸ்மார்ட்போன் இருக்கும்.
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!
மோட்டோ ஜி52 கேமரா (Moto G52 Camera)
பட்ஜெட் விலை மோட்டோ ஜி52 போனில் டிரிப்பிள் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50MP மெகாபிக்சல் கேமரா, உடன் 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP மெகாபிக்சல் f/2.4 கேமரா டிஸ்ப்ளே டாட் நாட்சில் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் பியூட்டி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயலி உள்ளது.
மோட்டோ ஜி52 பேட்டரி (Moto G52 Battery)
இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, அக்செலெரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 30W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது. டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.1, 3.5mm ஆடியோ ஜாக், NFC போன்ற இணைப்பு ஆதரவுடன் மோட்டோ ஜி52 போன் இருக்கிறது.
Alert: இந்த 4 எழுத்துகள் இருந்தால் அலர்ட்! போஸ்புக் மெசஞ்சரில் சுழலும் ஆபத்து!
மோட்டோ ஜி52 விலை (Moto G52 Price in India)
புதிய மோட்டோ போன், சார்கோல் கிரே, பீங்கான் வெள்ளை ஆகிய இரு வண்னத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வேரியன்டின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 25, 2022 அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Flipkart ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. Flipkart Axis Bank Card வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிய இணைந்திருங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்