ரஜினியின்
தலைவர் 169
படத்தை
நெல்சன் திலீப்குமார்
இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து வெளியான பீஸ்ட் படத்தை பார்த்தவர்கள் நெல்சன் திலீப்குமாரை திட்டித் தீர்த்தார்கள். அய்யோ, அடுத்து ரஜினியை வைத்து என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்றும், அதனால் தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சனை நீக்க முடிவு செய்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகி தீயாக பரவியது.
இருப்பினும் தலைவர் 169 குறித்து ரஜினி சமூக வலைதளத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ரஜினிக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,
தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் தான் இயக்கவிருக்கிறார். தற்போது ரஜினியிடம் ஸ்க்ரிப்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் மூலம் வெற்றி கண்ட நெல்சனுக்கு பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய்யை வைத்து சொதப்பிவிட்டார் நெல்சன் என தளபதி ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்.
தனுஷுக்கு இருக்கும் ஆசை, ஐஸ்வர்யாவுக்கு இல்லையாமே