புதுடில்லி,-நம் நாட்டில், அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற விரும்பாத ஊழியர்கள் பலரும், தங்கள் வேலையை ராஜினாமா செய்து வருவது தெரிய வந்துள்ளது.நாட்டில், 2020ல் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.வீட்டில் பணியாற்றியதால், குடும்பத்துடனான அவர்களின் இணைப்பு வலுப்பெற்றது; மன அழுத்தமின்றி வேலை பார்க்க முடிந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய அறிவுறுத்தின. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், வீட்டில் இருந்து பணியாற்றுவதையே பெரும்பாலான ஊழியர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.
அலுவலகத்திற்கு செல்ல விரும்பாத இவர்கள், வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கும் வேறு நிறுவனங்களில் சேர்ந்து வருகின்றனர்.அலுவலகத்திற்கு சென்று பணியாற்ற விரும்பாத காரணத்தால், 10ல் ஆறு பேர், தங்கள் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Advertisement