விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர்
ஷாலினி பாண்டே
. ரன்வீர் சிங்கின் ஜெயேஷ்பாய் ஜோர்தார் படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார்.
ஜெயேஷ்பாய் ஜோர்தார் படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியாக நடித்துள்ளார் ஷாலினி. இந்நிலையில் அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட ரன்வீர் சிங்கோ, ஷாலினி பாண்டே நடிப்பு ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்தார். தயவு செய்து உங்களின் நடிப்பு பயணம் பற்றி சொல்லுங்கள் ஷாலினி என்றார்.
உடனே ஷாலினி கூறியதாவது,
நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். நானும் முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. நான் நடிகையாக வேண்டும் என்று கூறியதை அப்பா ஏற்கவில்லை.
4 ஆண்டுகளாக அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன். இனியும் வேலைக்கு ஆகாது என்று வீட்டை விட்டு ஓட முடிவு செய்தேன். இப்பொழுது அது ஜோக் மாதிரி தெரிகிறது. ஆனால் அப்பொழுது அது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் நான் வீட்டை வீட்டு ஓடிவிட்டேன்.
என் பெற்றோர் தற்போது என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். அதில் எனக்கு சந்தோஷம். யஷ் ராஜ் படத்தில் நடிப்பது பெருமை என்றார்.
ஜெயேஷ்பாய் ஜோர்தார் படம் மே 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் திவ்யங் தாக்கர்.
மகன்களால் தனுஷ், ஐஸ்வர்யா வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல விஷயம், ஒரு…