சொந்த வீட்டை வாங்கும் கனவுடன் இருந்த பல கோடி மக்கள் கடந்த இரண்டு வருடத்தில் குறைவான வட்டியில் கடனை வாங்கிச் சொந்த வீட்டை வாங்கியுள்ளனர். ஆனால் இந்த நிலையில் தற்போது மாறி வருகிறது, ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தாவிட்டாலும், பல முன்னணி வங்கிகள் தனது MCLR விகிதத்தை 0.05 முதல் 0.10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்!
இதனால் வீட்டுக் கடன் வாங்குவோர் ஒரு முறைக்கு இரு முறை எந்த வங்கியில் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதன் பின் கடனுக்கான விண்ணப்பம் கொடுப்பது உத்தமம்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிகளவிலா பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகக் குறைத்தது. இதன் மூலம் வணிக வங்கிகள் அனைத்தும் வீட்டுக் கடனுக்கான வட்டியை தடாலடியாகக் குறைத்தது.
10 வருட சரிவு
இதன் வாயிலாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கடந்த 2 வருடமாக 10 வருட சரிவில் இருந்தது. ஆனால் தற்போது பணவீக்க உயர்வால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்தாலும், மாற்று வழியில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறது.
வட்டி உயர்வு
மேலும் வங்கிகள் தனது வருமானத்தை உயர்த்தும் வகையில் வட்டியை உயர்த்த துவங்கியுள்ளது, குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோட்டாக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆ பரோடா, ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் ஏற்கனவே வட்டியை உயர்த்தியுள்ள நிலையில் மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
MCLR விகிதம்
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது MCLR விகிதத்தை அதிகரித்துள்ள நிலையில் அடுத்தது நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமாக இருக்கும் HDFC தனது வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் 5 வங்கிகள்
இந்நிலையில் இந்தியாவில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் அளிக்கும் டாப் 5 வங்கிகள் இது தான்
மகாராஷ்டிரா வங்கி : 6.40% – 8.30%
UCO வங்கி : 6.50% – 7%
பேங்க் ஆஃப் இந்தியா : 6.50% – 8.35%
இந்தியன் வங்கி : 6.50% – 7.70%
பஞ்சாப் & சிந்து வங்கி : 6.50% – 7.60%
பொதுத்துறை வங்கி வட்டி விகிதம்
பேங்க் ஆஃப் பரோடா : 6.75% – 8.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.55% – 7.95%
பாரத ஸ்டேட் வங்கி : 6.65% – 7.65%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 6.60% – 7.60%
கனரா வங்கி : 6.65% – 11.45%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி : 7.05% – 7.40%
தனியார் வங்கி வட்டி விகிதம்
கோடக் மஹிந்திரா வங்கி : 6.60% முதல்
ஐசிஐசிஐ வங்கி : 6.70% – 7.55%
ஆக்சிஸ் வங்கி : 6.75% – 11.50%
கரூர் வைஸ்யா வங்கி : 7.15% – 9.35%
சவுத் இந்தியன் வங்கி : 7.35%-10.10%
கர்நாடக வங்கி : 7.50% – 8.75%
பெடரல் வங்கி : 7.65% – 7.70%
தனலட்சுமி வங்கி : 7.85% – 9%
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி : 8.25%
பந்தன் வங்கி : 6.40% – 13.50%
ஆர்பிஎல் வங்கி : 9.40%-11.10%
வீட்டி கடன் நிறுவனங்களின் வட்டி விகிதம்
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் : 6.70% – 7.85%
HDFC லிமிடெட். : 6.70% – 8.45%
டாடா கேபிடல் ஹவுசிங் ஃபைனான்ஸ் : 6.85% முதல்
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் : 6.65% முதல்
PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் : 6.75% – 12.00%
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் : 7.15% முதல்
GIC வீட்டு நிதி : 7.24% முதல்
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் : 7.60% முதல்
ஆதித்யா பிர்லா தலைநகர் : 9.00 – 12.50%
ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ் : 9.20% முதல்
ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் : 8.00% – 18.00%
which bank offers cheaper home loan interest rates; Check the latest rates
which bank offers cheaper home loan interest rates; Check the latest rates இந்தியாவிலேயே குறைவான வட்டியில் ஹோம் லோன்.. எந்த வங்கி தெரியுமா..?