இந்திய விமானப்படை சுகோய் வகைப் போர்விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதித்துள்ளது.
இந்திய கடற்படையின் கிழக்குப் பிரிவுடன் ஒருங்கிணைந்து விமானப்படை நடத்திய சோதனையில் சுகோய் 30 வகைப் போர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டது.
கடற்படைப் பணியில் இருந்து நீக்கப்பட்டுக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை இலக்காகக் கொண்டு இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.