இன்றைய மின் துண்டிப்பு நேரம்

நாடளாவிய ரீதியில் இன்றும் (20) 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்; மின் துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய வலயங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் அனைத்து வலயங்களிலும் (A, B, C, D, E, F, G, H, I, J, K, L,P, Q, R, S, T, U, V , W ) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

குறித்த வலயங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

K.Sayanthiny

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.