வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக இந்தியா கூடுதலாக ரூ.3,750 கோடி கடனுதவி வழங்க இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையில் வரலாறு காணாத வகையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தேவைக்கேற்ற விநியோகம் இல்லாத காரணத்தால் விலைவாசி விண்ணை தொட்டது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்துள்ளது. நிலைமையை சீரமைக்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஏற்கனவே இந்தியா 240 கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல், அரிசி, காய்கறிகள் போன்று பொருளுதவிகளையும் வழங்கியுள்ளது. இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை நிதியுதவி கேட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் கூறியதாவது: சர்வதேச நாணய நிதியத்தின் உதவி எங்களுக்கு வருவதற்கு சுமார் ஆறு மாதங்கள் ஆகும். அதுவும் தவணையாக தான் வரும். டைப்பட்ட காலத்தில், எங்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் நிதியைக் கண்டுபிடிக்க வேண்டும். எரிபொருள் கொள்முதலுக்காக இந்தியா கூடுதலாகரூ.3,750 கோடி கடனுதவியை வழங்க உள்ளது என தெரிவித்தார்.
Advertisement