வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு; இலங்கையில் நேற்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டையடுத்து அந்நாட்டில் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்டங்காமல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் அதிபர் கோத்தபய பதவி விலகக் கோரி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து ரம்புக்கனா பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முக்கிய சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது
கடும் மருந்து தட்டுப்பாடு
இந்நிலையில் அந்நாட்டில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களுக்கு கடும் மருந்து தட்டுப்பாடு நிலவும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பணவீக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
Advertisement